

இந்த போட்டி தொடரின் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி அக்டோபர் 10-ந் தேதி அங்குள்ள சுசுகா ஓடுதளத்தில் நடக்க இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த போட்டியை ரத்து செய்வதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த போட்டி வேறு இடத்தில் நடைபெறுவது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று பார்முலா1 போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு காரணமாக ஜப்பான் கிராண்ட்பிரி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.