உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஓட்டப் பந்தய வீரர் - அனிமேஷ் குஜுர் சாதனை

கோப்புப்படம்
அனிமேஷ் குஜுர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 200 மீ ஓட்டப் பந்தய போட்டியில் சத்தீஷ்கரை சேர்ந்த 22 வயதான அனிமேஷ் குஜுர் 20.63 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்தார்.
இதன்மூலம் அடுத்த மாதம் 13 முதல் 21ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெற இருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதிப் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 100 மீ (10.18 வினாடிகள்), 200 மீ (20.32 வினாடிகள்) போட்டிகளில் சாதனைப் படைத்துள்ளார்.
Related Tags :
Next Story






