ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் காலமானார்

அவரது சிறந்த செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 1979-ம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் காலமானார்
Published on

புதுடெல்லி,

1978-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 'டிராப்' பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் ரந்தீர் சிங். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய அவர் 1968, 1972, 1976, 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்றுள் ளார். அவரது சிறந்த செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 1979-ம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

1987 முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளராக இருந்தார். 2001 முதல் 2014-ம் ஆண்டு வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக செயல்பட்டார். அவர் 2024-ம் ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவராக தேர்வானார்.

கடந்த ஜனவரி மாதம் உடல் நலபிரச்சினை காரணமாக பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த ரந்தீர் சிங் நேற்று மரணம் அடைந்தார். அவரது வயது 79. அவரது மறைவுக்கு,ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்பட பல்வேறு விளையாட்டு அமைப்புகள் இரங்கல் தெரி வித்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com