பார்முலா1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
பார்முலா1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
Published on

ஷாங்காய்,

இதன் 3-வது சுற்றான சீனா கிராண்ட்பிரி போட்டி ஷாங்காய் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 305.066 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் பங்கேற்ற 20 வீரர்களும் போட்டி தொடங்கியதும் காரில் சீறிப்பாய்ந்தனர். பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 06.350 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 6.552 வினாடிகள் பின்தங்கி 2-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 13.744 வினாடிகள் பின்தங்கி 3-வது இடத்தையும் பெற்றனர். இந்த ஆண்டில் லீவிஸ் ஹாமில்டன் 2-வது முறையாக முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். இந்த போட்டி தொடரில் மெர்சிடஸ் அணியை சேர்ந்த லீவிஸ் ஹாமில்டன், வால்ட்டெரி போட்டாஸ் ஆகியோர் தொடர்ந்து 3-வது முறையாக முதல் 2 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com