இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக பிரடெரிக் நியமனம்

பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரரான 48 வயது பிரடெரிக் சோயஸ் நேற்று நியமிக்கப்பட் டார்.
இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக பிரடெரிக் நியமனம்
Published on

புதுடெல்லி,

இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இருந்து வந்த ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய அணியில் அங் கம் வகித்த கேரளாவை சேர்ந்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்திய ஜூனி யர் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரரான 48 வயது பிரடெரிக் சோயஸ் நேற்று நியமிக்கப்பட் டார்.

2016, 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக் கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராகவும், 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com