கேரளாவைச் சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு இலவச பயிற்சி: மேரிகோம்

முதன்முறையாக கேரள ஒலிம்பிக் போட்டிகள் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று தொடங்கின.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்:

கேரள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரம் வந்த இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

கேரளா பல குத்துச்சண்டை வீரர்களை வழங்கியுள்ளது. கேரளாவில் இருந்து வளர்ந்து வரும் சர்வதேச குத்துச்சண்டை வீரர்கள் இன்று இல்லை. கேரளாவில் இருந்து திறமையான இளம் குத்துச்சண்டை வீரர்கள் வரும்போது, எங்கள் அகாடமியில் இலவச பயிற்சி அளிப்போம்.

இதுபோன்ற சர்வதேச விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கு ஒலிம்பிக் சங்கம் போன்ற அமைப்புகள் முன்முயற்சி எடுக்க வேண்டும். ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி குறித்து அதிக கவனம் செலுத்துகிறேன். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே எனது ஒரே ஆசை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com