பிரீஸ்டைல் சர்வதேச செஸ்: இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அரையிறுதிக்கு முன்னேற்றம்


பிரீஸ்டைல் சர்வதேச செஸ்: இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 July 2025 8:30 AM IST (Updated: 19 July 2025 8:30 AM IST)
t-max-icont-min-icon

பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.

லாஸ் வேகாஸ்,

பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலலிறுதிக்கு முன்னேறினர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் நோடிர்பெக் அப்துசத்தோரோவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.

முதல் ரேபிட் ஆட்டத்தில் வெற்றியும், 2-வது ஆட்டத்தில் டிராவும் செய்த அர்ஜுன் எரிகைசி பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

1 More update

Next Story