பிரீஸ்டைல் சர்வதேச செஸ் : கார்ல்செனிடம் வீழ்ந்த பிரக்ஞானந்தா


பிரீஸ்டைல் சர்வதேச செஸ் : கார்ல்செனிடம் வீழ்ந்த பிரக்ஞானந்தா
x

கோப்புப்படம்

பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.

லாஸ் வேகாஸ்,

கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடரின் ஒரு அங்கமான பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 3 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 1-3 என்ற புள்ளி கணக்கில் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே) தோல்வியை தழுவினார்.

இதையடுத்து கார்ல்சென், இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை சந்தித்தார். அதில் கார்ல்சென் 2-0 என்ற புள்ளி கணக்கில் எரிகைசியை தோற்கடித்து 3-வது இடத்துக்கான ஆட்டத்துக்கு முன்னேறினார். 3-வது இடத்துக்கான மோதலில் கார்ல்சென், 2-ம் நிலை வீரரான ஹிகாரு நகமுராவை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

முன்னதாக ஹிகாரு நகமுரா, அமெரிக்காவின் வெஸ்லி சோ, பாபியானோ கருனா ஆகியோரை வீழ்த்தி 3-வது இடத்துக்கான ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். தோல்வியை சந்தித்த பிரக்ஞானந்தா அடுத்து 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்திக்கிறார். இதே போல் மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாபியானோ கருனாவை எதிர்கொள்கிறார்.

1 More update

Next Story