பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவுக்கு 7-வது இடம்


பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவுக்கு 7-வது இடம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 July 2025 6:30 AM IST (Updated: 22 July 2025 6:31 AM IST)
t-max-icont-min-icon

அர்ஜுன் எரிகைசிக்கு ரூ.34 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.25 லட்சமும் பரிசாக கிடைத்தன.

லாஸ் வேகாஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' செஸ் தொடரின் ஒரு அங்கமான பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் லெவோன் அரோனியன் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் சக நாட்டு வீரர் ஹான்ஸ் மோக் நிமேனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.1.72 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

2-வது இடம் பிடித்த ஹான்ஸ் மோக் நிமோருக்கு ரூ.1.2 கோடி கிடைத்தது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை தோற்கடித்து 3-வது இடத்தை சொந்தமாக்கினார். கார்ல்செனுக்கு ரூ.86 லட்சம் பரிசாக கிட்டியது.

5-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 0-2 என்ற புள்ளி கணக்கில் பாபியனோ கருனாவிடம் (அமெரிக்கா) வீழ்ந்து 6-வது இடம் பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வெஸ்லி சோவை (அமெரிக்கா) வீழ்த்தி 7-வது இடத்தை தனதாக்கினார். அர்ஜுன் எரிகைசிக்கு ரூ.34 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.25 லட்சமும் பரிசாக கிடைத்தன.

1 More update

Next Story