

புதுடெல்லி,
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் உபேர் கோப்பைபோட்டிக்கான இந்திய அணியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்க காயத்ரி கோபிசந்த் - திரிஷா ஜாலி இணை தகுதி பெற்று இருந்தது.
இந்த நிலையில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக காயத்ரி கோபிசந்த் உபேர் கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
டாக்டர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.