ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் இன்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
Published on

பெர்லின்,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொண்டார். அவர் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பூசனன் ஓங்பாம்ருங்பானை (தாய்லாந்து) எதிர்கொண்டார்.

32 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-8 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவரை 15-வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்தார். சிந்து தனது அடுத்த போட்டியில் ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரேல்ஸ் அல்லது சீனாவின் சாங்-இ-மானை எதிர்கொள்வார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக போட்டியில் பதக்கம் கைப்பற்றியவரான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்று ஆட்டத்தில் பிரைஸ் லிவெர்டெஸ்சுடன் (பிரான்ஸ்) எதிர்கொண்டார். 48 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-10 13-21 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் அடுத்த போட்டியில் சீனாவின் லூ குயாங் சுவை எதிர்கொள்வார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com