கோவாவில் நடைபெறும் உலகக்கோப்பை செஸ் தொடர்

17 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பனாஜி,
உலககோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் 27ம் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 206 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு 17 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் குகேஷ், கால்சன் உள்பட நட்சத்திர வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
உலகக்கோப்பை செஸ் தொடர் 23 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






