கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவை வீழ்த்திய குகேஷ்

கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவை வீழ்த்திய குகேஷ்
x

கோப்புப்படம்

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.

ஜாக்ரெப்,

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.

இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.

முதல் நாளில் 3 சுற்றுகள் நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான் டுடாவிடம் தோல்வியடைந்தார். பின் சுதாரித்த குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரேசாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினர்.

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) ஆகியோர் 'டாப்-4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.

1 More update

Next Story