கிராண்ட் செஸ் தொடர்; கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற குகேஷ்


கிராண்ட் செஸ் தொடர்; கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற குகேஷ்
x

கோப்புப்படம்

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது

ஜாக்ரெப்,

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின் ஆறாவது சுற்றில், உலகச் சாம்பியன் டி. குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை சந்தித்தார். இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட குகேஷ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி, குகேஷின் ஐந்தாவது தொடர் வெற்றியாகும், மேலும் அவர் 10 புள்ளிகளுடன் தனித்து முன்னிலை வகிக்கிறார்.

நார்வே செஸ் 2025 போட்டியில் கார்ல்சனை முதன்முறையாக வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்த ரேபிட் வடிவ போட்டியில் குகேஷ் மீண்டும் கார்ல்சனை வீழ்த்தி உள்ளார். இந்த போட்டிக்கு முன்னர் பேட்டி அளித்த கார்ல்சன் , "ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவங்களில் பலவீனமான வீரர்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், குகேஷ் தனது திறமையால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

1 More update

Next Story