கிராண்ட் சுவிஸ் செஸ்: தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்


கிராண்ட் சுவிஸ் செஸ்: தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்
x
தினத்தந்தி 16 Sept 2025 6:46 AM IST (Updated: 16 Sept 2025 11:18 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் வைஷாலி தகுதி பெற்றார்.

சமர்கண்ட்,

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வந்தது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் வைஷாலி 43-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் ‘டிரா’ செய்தார்.

11-வது சுற்று முடிவில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியும் (6 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) ரஷியாவின் கேத்ரினோ லாக்னோவும் (5 வெற்றி, 6 டிரா) தலா 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இருப்பினும் அதிக வெற்றி அடிப்படையில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் 8 வீராங்கனைகள் இடையிலான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார். 2-வது இடத்தை பிடித்த கேத்ரினோ லாக்னோவும் கேண்டிடேட்ஸ் இடத்தை உறுதி செய்தார்.


1 More update

Next Story