கிராண்ட் சுவிஸ் செஸ்: 8-வது சுற்றில் தோல்வி கண்ட வைஷாலி

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சமர்கண்ட்,

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் ஓபன் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நிஹால் சரின், மத்தியாஸ் புளூபாம் (ஜெர்மனி) இடையிலான ஆட்டம் 21-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இதே போல் அர்ஜுன் எரிகைசி (இந்தியா) 31-வது நகர்த்தலில் சாந்த் சர்க்சியனுடன் (அர்மேனியா) டிரா செய்தார். தமிழகத்தின் பிரக்ஞானந்தா- ரிச்சர்ட் ராப்போர்ட் (ஹங்கேரி), திவ்யா தேஷ்முக்- குகேஷ் (இருவரும் இந்தியா) இடையிலான மோதலும் டிரா ஆனது.

இதன் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி 39-வது நகர்த்தலில் பிபிசாரா அஸ்சாபயேவாவிடம் (கஜகஸ்தான்) தோல்வியை தழுவினார். இன்னும் 3 சுற்றுகள் எஞ்சி இருக்கும் நிலையில் கேத்ரினோ லாக்னோ (ரஷியா) 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வைஷாலி 6 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com