138 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டருக்கு 60 ஆண்டுகள் சிறைதண்டனை

138 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மருத்துவர் - 60 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது மிச்சிகன் நீதிமன்றம்.
138 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டருக்கு 60 ஆண்டுகள் சிறைதண்டனை
Published on

வாஷிங்டன்

அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக இருப்பவர் லார்ரி நாசர் (54). டாக்டர் ஆக இருக்கிறார். இவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியில் டாக்டராக பணிபுரிந்தார்.

அப்போது இவர் தன்னிடம் உடல் பரிசோதனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து அவர்களை நிர்வாண படம் எடுத்து சித்ரவதை செய்ததாக புகார்கள் வந்தன. இவர் மீது மிச்சிகன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனி,

வழக்கை விசாரித்த நீதிபதி ஜானெட் நெப் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் லார்ரி நாசருக்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார்.

சிறுமிகளை நிர்வாண படம் எடுத்ததில் 3 வழக்கு களில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா 20 ஆண்டுகள் வீதம் தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

இதற்கிடையே அவர் மீது செக்ஸ் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடை பெற்று வருகிறது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த மாதம் (ஜனவரியில்) வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com