

புதுடெல்லி,
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை தோகாவில் நடக்கிறது. இந்த போட்டியில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இளம் வீராங்கனை ஹிமா தாஸ் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் இருந்து 19 வயதான அசாமைச் சேர்ந்த ஹிமா தாஸ் நேற்று விலகி இருக்கிறார். இந்த தகவலை இந்திய தடகள சம்மேளன தலைவர் அடிலே சுமரிவாலா தெரிவித்தார்.