இந்தியாவில், காமன்வெல்த் விளையாட்டு: உரிமம் கோர ஒலிம்பிக் சங்கம் முடிவு

இந்தியாவில், காமன்வெல்த் விளையாட்டுக்கான உரிமம் கோர ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், காமன்வெல்த் விளையாட்டு: உரிமம் கோர ஒலிம்பிக் சங்கம் முடிவு
Published on

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 2026 அல்லது 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கியதால் கடும் அதிருப்திக்குள்ளான இந்திய ஒலிம்பிக் சங்கம், 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது. இதன் பின்னர் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்து சமாதானப்படுத்தினர். அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை புறக்கணிக்கும் திட்டத்தை கைவிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம் அந்த போட்டிக்கு இந்திய அணியை அனுப்பி வைப்பது என்றும் தீர்மானித்தது. இந்த தகவலை தெரிவித்த ஐ.ஓ.ஏ. பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, காமன்வெல்த் விளையாட்டை நடத்த உரிமம் கோரும் முடிவுக்கு அனுமதி பெறுவதற்காக அடுத்து மத்திய அரசை அணுகுவோம் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் கடைசியாக 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் பிரிவை நீக்கியதால் அதை ஈடுகட்டும் வகையில் தனியாக காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பை நடத்த தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த ஐ.ஓ.ஏ, விரைவில் அதை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்துக்கு அனுப்பி வைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com