அர்ஜென்டினாவுக்கு எதிராக ஆக்கி தொடரை சமன் செய்த இந்தியா

4-வது மற்றும் கடைசி ஆட்டம் பியூனஸ் அயர்சில் நடந்தது.
அர்ஜென்டினாவுக்கு எதிராக ஆக்கி தொடரை சமன் செய்த இந்தியா
Published on

பியூனஸ் அயர்ஸ்,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இந்தியா-அர்ஜென் டினா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் பியூனஸ் அயர்சில் நடந்தது. விறுவிறுப்பான ஆட் டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த ஷூட்-அவுட் டில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி யது. இதன் மூலம் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. முதல் இரு ஆட்டங்களிலும் 2-4, 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்த இந்தியா 3-வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com