ஒலிம்பிக் போட்டிக்கான திட்டங்களை சர்வதேச கமிட்டியிடம் இந்தியா விளக்கம்

போட்டி நடத்தும் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் விளக்கி தங்கள் மீதான கவனத்தை ஈர்க்க உள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கான திட்டங்களை சர்வதேச கமிட்டியிடம் இந்தியா விளக்கம்
Published on: 

2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென்கொரியா, தென்ஆப் பிரிக்கா, துருக்கி ஆகிய 7 நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருக்கின்றன.

அடிப்படை வசதிகள்

குஜராத் மாநிலம் ஆமதாபாத் தில் போட்டியை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. போட்டியை நடத்த விண்ணப்பித்து இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா போட்டியை நடத்துவதற்கு தங்களிடம் இருக்கும் அடிப்படை வசதிகள், சர்வதேச போட்டிகளை நடத்திய அனுபவம் மற்றும் போட்டிக்கான திட்டங்களை இன்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்காலப் போட்டி நடத்தும் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் விளக்கி தங்கள் மீதான கவனத்தை ஈர்க்க உள்ளது.

இதில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் குஜராத் மாநில விளையாட்டு மந்திரி ஹர்ஷ் சங்ஹவி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

X