இந்திய ஓபன் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய எச்.எஸ்.பிரனாய்


இந்திய ஓபன் பேட்மிண்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய  எச்.எஸ்.பிரனாய்
x

இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும்.இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story