இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரரான தருண் மன்னேபல்லியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆதிக்கம் செலுத்தி 15-21, 21-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com