வரலாறு படைத்த இந்திய பெண்கள் ஹாக்கி அணி... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது!

அரையிறுதியில் அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
வரலாறு படைத்த இந்திய பெண்கள் ஹாக்கி அணி... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது!
Published on

டோக்கியோ

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 11வது நாளான இன்று நடந்த பெண்கள் ஹாக்கி போட்டி காலிறுதியில் இந்தியா அணி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

இந்திய அணி ஊனையும் உயிரையும் முன் நிறுத்தி டிஃபண்ட் செய்தது. சரித்திரத்தை அரங்கேற்றியிருக்கிறது.

ஒட்டுமொத்த தேசத்தையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறார்கள் இந்திய ஹாக்கி வீராங்கனைகள். காலிறுதிக்கே போகாது என்று கருதப்பட்ட அணி, இன்று அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

கோல்கீப்பர் சவிதா, டிபண்டர்கள் தீப் கிரேஸ், நிக்கி பிரதான், குர்ஜித்... ஒவ்வொருவரும் இந்தியாவின் ஸ்டார்களாகக் கொண்டாடப்படவேண்டும்!

இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. குர்ஜித் கவுர் கோல் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியுள்ளார்.பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்தார் குர்ஜித் கவுர்,இன்றைய பரபரப்பான காலிறுதி ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார், இதுவே அவரது முதல் ஒலிம்பிக் கோலாகவும் அமைந்தது. வரலாற்று வெற்றியில், மகளிர் ஹாக்கி அணியின் ஒலிம்பிக் மைல்கல் வெற்றியில் இதன் மூலம் குர்ஜித் கவுர் தடம்பதித்தார்.

ஆஸ்திரேலிய பெண்கள் ஹாக்கி அணி 3 முறை சாம்பியன்களாகும்.

இந்திய ஆண்கள் அணி கடைசியாக 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரைஇறுதியில் கால்பதிக்கும் வாய்ப்பு கனிந்துள்ளது.

அரையிறுதியில் அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முன்னதாக அர்ஜெண்டினா அணி ஜெர்மனியை 3-0 என்று வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

130 கோடி இந்தியர்களும் உங்கள் பின்னால் இருக்கிறோம் என இந்திய பெண்கள் ஹாக்கி அணியை மத்திய மந்திரி அனுராக் தாகூர் வாழ்த்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com