2030 இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளது - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா

2030 இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

புதுடெல்லி,

யூத் ஒலிம்பிக் போட்டிகள் என்பது உலகம் முழுவதிலுமிருந்து 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களுக்கான ஒரு விளையாட்டு நிகழ்வு ஆகும். இந்த தொடர் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சீனா (2014), அர்ஜெண்டினாவில் (2018) தொடர் நடத்தப்பட்டது.

இந்த தொடரின் 4வது பதிப்பு 2026ம் ஆண்டு செனகலில் அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 5வது இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் 2030ம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2030ம் ஆண்டு நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கூட்டத்தில் மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்னோடியாக 2030 இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாங்கள் 2030 இளையோர் ஒலிம்பிக்கிற்கு ஏலம் எடுக்கப் போகிறோம். அதே சமயம், 2036 ஒலிம்பிக் தொடரை நடத்துவதில் எங்கள் கவனம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com