ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் சர்வதேச போட்டிகளில் விளையாட இடைக்கால தடை

டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

புதுடெல்லி,

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் கசிந்த இ-மெயிலில், அவரது சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் பாதகமான முடிவுகள் வந்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

ஊக்கமருந்து பரிசோதனையை எதிர்த்து வீராங்கனை டூட்டி சந்த் மேல்முறையீடு செய்துள்ளார். பரிசோதனை அறிக்கை போலி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் அறிவிப்பு தனக்கு வரவில்லை என்று கூறிய டூட்டி சந்த், தான் நீண்ட காலமாக சர்வதேச அளவில் போட்டியிடுவதாகவும், தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதில்லை என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com