ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்ட விவரத்தை கேட்கும் ஒலிம்பிக் சங்கம்

கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்ட விவரத்தை கேட்கும் ஒலிம்பிக் சங்கம்
Published on

இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்ட முழு விவரங்களையும் தெரிவிக்கும் படி தேசிய விளையாட்டு சம்மேளனங்களை, இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்த விவரங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியது இருப்பதால் தடுப்பூசியின் பெயர் மற்றும் அதன் ஒவ்வொரு டோசும் போட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி தெரிவித்துள்ளது. நமது வீரர்கள் எந்த நாட்டில் இருந்து டோக்கியோ செல்கிறார்கள் என்ற விவரத்தையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அத்துடன் போட்டிக்கு புறப்படும் முன்பாக கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்து வீரர்களுக்கு முழுமையாக விளக்க வேண்டும் என்றும் இ்ந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com