இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் லக்சயா சென் தோல்வி

கோப்புப்படம்
நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபேயின் லின் சுன் யியை எதிர்கொண்டார்.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 14-வது இடம் வகிப்பவருமான இந்திய வீரர் லக்சயா சென், 12-ம் நிலை வீரரான சீன தைபேயின் லின் சுன் யியை எதிர்கொண்டார்.
68 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-17, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story






