இந்திய துப்பாக்கி சுடுதல் பெண் பயிற்சியாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி; தந்தையும் உயிரிழந்த சோகம்

இந்திய துப்பாக்கி சுடுதல் பெண் பயிற்சியாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கும், அவரது தந்தை கொரோனா பாதிப்புக்கும் உயிரிழந்து உள்ளனர்.
இந்திய துப்பாக்கி சுடுதல் பெண் பயிற்சியாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி; தந்தையும் உயிரிழந்த சோகம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கான பெண் பயிற்சியாளராக இருந்த மோனாலி கோர்ஹே என்பவர் கருப்பூ பூஞ்சை நோய் பாதித்து இன்று உயிரிழந்து உள்ளார்.

இதுபற்றி இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கைத்துப்பாக்கி மைய குழு பயிற்சியாளர் மற்றும் திறன் வாய்ந்த தொழில்நுட்ப அதிகாரியான மோனாலி கோர்ஹே கருப்பூ பூஞ்சை நோய் பாதித்து இன்று உயிரிழந்து உள்ளார் என நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

அவரது தந்தையும் இன்று உயிரிழந்து உள்ளார் என்பது சோகமானது. ஒரு கடின உழைப்பாளியின் மறைவுக்கு துப்பாக்கி சுடுதல் அமைப்பு இரங்கல் தெரிவித்து கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோனாலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றார். அதன்பின் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் அவர் உயிரிழந்து உள்ளார். கொரோனா பாதித்த அவரது தந்தை மனோகர் கோர்ஹே, மோனாலியின் மறைவுக்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன் உயிரிழந்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com