

புதுடெல்லி,
இந்திய பெண்கள் ஆக்கி அணி, அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு பெண்கள் அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொட ரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஆக்கி போட்டிகள் பியூ னஸ் அயர்சில் முறையே வருகிற 13, 14, 16, 17 ஆகிய தேதிகளில் நடக் கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: சவிதா, பிச்சுதேவி கரிபாம்.
பின்களம்: நிக்கி பிரதான்,இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு பும்ரம்பாம், மனிஷா சவுகான், லால்தண்ட் லுவாங்கி, ஜோதி. உதிதா.
நடுகளம்: சலிமா டெடெ(கேப்டன்),வைஷ்ணவி விட்டல் பால்கே, சாஷி ராணா, சுனெலிதா டாப்போ, நேஹா, தீபிகா சோரெங், ருதுஜா பிசல், இஷிகா.
முன்களம்: பல்ஜீத் கவுர், நவ்னீத் கவுர்,தீபிகா, அன்னு, பியூட்டி டங்டங், லால்ரெம்சியாமி, மும்தாஜ் கான்.