

வாஷிங்டன்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 6-4 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லேனர் டைனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பிரிட்டிஷ் வீரர் ஜேக் டிராபரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.