

வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று காலை நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்திய கலப்பு அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி 5-3 (செட் பாயிண்ட்கள்) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.