காமன்வெல்த் 2018: துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி ஸ்வந்த் தங்கம் வென்றார்

காமன்வெல்த் போட்டித்தொடரில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி ஸ்வந்த் தங்கபதக்கம் வென்றுள்ளார். #Commonwealth2018 #CommonwealthGames
காமன்வெல்த் 2018: துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி ஸ்வந்த் தங்கம் வென்றார்
Published on

கோல்டு கோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான இன்றும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது.

மகளிர் 50 மீட்டர் துப்பாக்கிசுடுதல் பிரிவில். இந்தியாவின் தேஜஸ்வினி ஸ்வந்த் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல், 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலின் மற்றொரு பிரிவில், இந்தியாவின் அஞ்சூம் மவுட்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியா தற்போது, 15 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 33 பதக்கங்களுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com