இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : காலிறுதியில் இந்தியாவின் லக்‌சயா சென் தோல்வி

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
Image Courtesy : Badminton Association of India 
Image Courtesy : Badminton Association of India 
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் 21-18, 21-15 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகின் 4ம் நிலை வீரரான சௌ தியென் சென்-னை லக்சயா சென் எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 16-21, 21- 12, 14-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஒற்றையர் பிரிவில் இருந்து லக்சயா சென் வெளியேறியுள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com