இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் : காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் பிரணாய்

சிறப்பாக விளையாடிய ஹெச்.எஸ் பிரணாய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Image Courtesy : PTI 
Image Courtesy : PTI 
Published on

ஜகார்தா,

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்தாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றோரு போட்டியில் இந்திய வீரர் பிரணாய் சக வீரரான லக்சயா சென்-னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு மமுன்னேறி இருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் ஹெச்.எஸ் பிரணாய் ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரணாய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2-வது சுற்றில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா தோல்வி அடைந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com