இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்சயா சென் வெற்றி


இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்சயா சென் வெற்றி
x

கோப்புப்படம் 

இந்திய வீரர் லக்‌சயா சென், சீன தைபேயின் வாங் சு வெய்யை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜகர்த்தா,

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 33-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 22-ம் நிலை வீரரான கோகி வாடனாபியை (ஜப்பான்) எதிர்கொண்டார். 1 மணி 12 நிமிடம் நீடித்த திரில்லிங்கான ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-23, 24-22 என்ற செட் கணக்கில் கோகி வாட்னாபியை அடக்கி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதே போல் இந்தியாவின் லக்‌சயா சென் 21-13, 16-21, 21-14 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் வாங் சு வெய்யை வென்றார். மற்ற இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மனானி சுய்சூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அன்மோல் கார்ப் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் பாய் யூ போவை விரட்டியடித்தார். அதே சமயம் ஆகர்ஷி காஷ்யப் 21-8, 20-22, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஜூலி டாவலிடம் போராடி பணிந்தார். மாள்விகா பான்சோத், தன்வி ஷர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

1 More update

Next Story