இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தோல்வி கண்ட இந்திய ஜோடி

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் மான் வெய் சோங் - டீ கை வுன் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட மான் வெய் சோங் - டீ கை வுன் ஜோடி 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடியை வீழ்த்தியது.

இதன் மூலம் காலிறுதியில் தோல்வி கண்ட சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com