இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் தோல்வி

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ஹாங்காங்கின் லீ சீக் யூ உடன் மோதினார்.


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் தோல்வி
Published on

ஜகர்தா,

இந்தோனேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ஹாங்காங்கின் லீ சீக் யூ உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஹாங்காங் வீரர் 16-21, 21-13, 21-14 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் ஆயுஷ் செட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com