சர்வதேச பேட்மிண்டன்: தன்வி அரையிறுதிக்கு தகுதி

தன்வி ஷர்மா தென்கொரியாவின் யான் ஹேப் உடன் மோதினார்.
சர்வதேச பேட்மிண்டன்: தன்வி அரையிறுதிக்கு தகுதி
Published on

லக்னோ,

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் 16 வயதான தன்வி ஷர்மா தென்கொரியாவின் லோ சின் யான் ஹேப் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தன்வி ஷர்மா 21-13, 21-19 என்ற நேர் செட்டில் லோ சின் யான் ஹேப்பிக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

உன்னதி ஹூடா, முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத் ஆகிய இந்தியர்களும் அரையிறுதியை எட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com