

விஜ்க் ஆன் ஜீ,
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்த 11-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாராவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அர்ஜூன் எரிகைசி 66-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்திய கிராண்ட்ஸ்மாஸ்டர் பிரக்ஞானந்தா 63-வது நகர்த்தலில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரிடம் வீழ்ந்து 3-வது தோல்வியை கண்டார்.
11-வது சுற்று முடிவில் ஜவோகிர் சிந்தாராவ், நோடிர்பெக் அப்துசத்தோரோவ் தலா 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஜோர்டான் வான் பாரஸ்ட், மத்யாஸ் புளூபாம், ஹான்ஸ் மோக் நிமான் (அமெரிக்கா) தலா 6.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர்