சர்வதேச செஸ் போட்டி: நிகால் சரின் சாம்பியன்


சர்வதேச செஸ் போட்டி: நிகால் சரின் சாம்பியன்
x
தினத்தந்தி 10 Jan 2026 8:30 PM IST (Updated: 10 Jan 2026 8:30 PM IST)
t-max-icont-min-icon

நிகால் சரின் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கொல்கத்தா,

டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடர் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் ரேபிட் ஓபன் பிரிவில் கடைசி 3 சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. இதன் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் நிகால் சரின், முன்னாள் உலக சாம்பியனும், சக நாட்டவருமான விஸ்வநாதன் ஆனந்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 25-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இந்த போட்டி டிராவில் முடிந்ததால், கடைசி சுற்று முடிவில் கேரளாவை சேர்ந்த 21 வயதான நிகால் சரின் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 2-வது இடமும், இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 3-வது இடமும் பிடித்தனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா 6-வது இடம் பெற்றார்.

1 More update

Next Story