சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்

image courtesy: PTI
சர்வதேச செஸ் போட்டி தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ,
87-வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் நடந்து வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற 13-வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். குகேஷ் சக நாட்டவரான அர்ஜுன் எரிகைசிக்கு எதிராகவும், பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிராகவும் தோல்வியடைந்தனர்.
இதனால் மீண்டும் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
Related Tags :
Next Story