ஈரான் அணியின் பயிற்சி முகாம் மெக்சிகோவுக்கு மாற்றம்

பயிற்சியை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என்ற ஈரானின் வேண்டுகோளை 'பிபா' ஏற்றுக்கொண்டுள்ளது.

ஈரான் அணியின் பயிற்சி முகாம் மெக்சிகோவுக்கு மாற்றம்
Published on

போனிக்ஸ்,

48 அணிகள் இடையிலான 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெ ரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதில் ஈரான் அணி 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணிக்குரிய மூன்று லீக் ஆட்டங்களும் (நியூசிலாந்து, பெல்ஜியம், எகிப்துக்கு எதிராக) அமெரிக்கா வின் இங்கில்வுட் மற்றும் சியால்வுட் நகரில் நடைபெறுகிறது.

ஆனால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணாக இந்த உலகக் கோப்பை போட்டியில் ஈரான் ஆடுவது சந்தேகமானது. அந்த நாடும் உலகக் கோப்பை போட் டியை புறக்கணிப்பது குறித்து யோசித்தது. பிறகு சர்வதேச கால்பந்து சம் மேளனம் (பிபா) அவர்களை சமாதானப்படுத்தியதால் இப்போது போட் டிக்கு தயாராகி வருகிறது.

ஈரான் அணிக்குரிய பயிற்சி முகாம் அமெரிக்காவின் டுசானில் நடத்த ஏற் பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பயிற்சியை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என்ற ஈரானின் வேண்டுகோளை 'பிபா' ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி அவர்கள் மெக்சிகோவின் டியுவானாவில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com