இந்திய நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த் திருமணமா?

இந்திய நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த் வெளியிட்டு உள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.
இந்திய நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த் திருமணமா?
Published on

புவனேஸ்வர்

ஒலிம்பியன் டூட்டி சந்த் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான மோனாலிசாவுடன் ஒரு மனதைக் கவரும் செய்தியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் அதில் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஒடிசாவை சேர்ந்தவர் 24 வயதானவர் டூட்டி சந்த். ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ, 200 மீ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை டூட்டி சந்த் பெற்றுள்ளார். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாப்போலியில் நடந்த யுனிவர்சியேடில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் 1980ல் பங்கேற்ற பி.டி. உஷாவிற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கடந்த 2016ல் டூட்டி சந்த் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமைக்கு காரணமானார்.

2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில்தான் பாலின விவகாரத்தில் சிக்கினார். அவரிடம் ஆண்தன்மைக்குரிய ஹார்மோன் அதிகமாக இருப்பதாக கூறி தடகள போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடைக்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் டூட்டி சந்த் முறையிட்டார். அவருக்கு ஆதரவாக இந்திய விளையாட்டு ஆணையமும் களத்தில் குதித்தது. மேலும் சர்வதேச அளவில் பல வீரர்களும், விஞ்ஞானிகளும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு 2015ம் ஆண்டு அவர் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது. 2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற போது, ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியாவின் முதல் பெண் தடகள வீராங்கனையான சந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பாலுறவை வெளிப்படுத்தினார்.

பிப்ரவரி 2022 இல், தனது காதலியின் பெயரை மோனாலிசா என வெளிப்படுத்தினார், அவர் சமீபத்தில் ஒடியா இதழான காதம்பினியின் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருந்தார்.

கைகளால் இதயத்தை வெளிபடுத்தும் படத்தை சந்த் டுவீட் செய்தார்.

அவர் "நேற்று உன்னை நேசித்தேன், இன்றும் உன்னை நேசிக்கிறேன், எப்போதும் என்றும் உன்னை நேசிப்பேன் என்று தலைப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் டூட்டி சந்துக்கு திருமணமாகிவிட்டதாக திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் அது டூட்டி சந்தின் சகோதரி அஞ்சனாவின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com