

* ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்து வரும் (பி பிரிவு) உத்தரபிரதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 353 ரன்கள் குவித்துள்ளது. சர்ப்ராஸ்கான் 132 ரன்கள் (160 பந்து, 14 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி களத்தில் உள்ளார். மும்பை அணி இன்னும் 272 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடுகிறது.