ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் : 43 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது இந்தியா

இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த தொடரில் அதிகபட்சமாக 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று அசத்தினார்.
ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் : 43 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது இந்தியா
Published on

லிமா

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெரு நாட்டின் லிமா நகரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. தொடக்க நாள் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியினர் 17 தங்கம் ,16 வெள்ளி,10 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்தனர்.

கடைசி நாளான நேற்று முன்தினம் மட்டும் இந்திய வீரர் ,வீராங்கனைகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மொத்தம் 21 பதக்கங்களுடன் அமெரிக்க அணி பதக்க பட்டியலில் இரண்டாம் இடத்தையும் ,10 பதக்கங்களுடன் இத்தாலி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

19 வயதேயான இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த தொடரில் அதிகபட்சமாக 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று அசத்தினார். மற்றொரு இந்தியா வீராங்கனை கணேமத் சேகோன் ஒரு தங்கம் ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com