இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் ராஜினாமா

பிளே-ஆப் சுற்றின் ஒரு இறுதி ஆட்டம் போஸ்னியாவில் உள்ள செனிகா நகரில் நடந்தது.
இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் ராஜினாமா
Published on

ரோம்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான கடைசி தகுதி சுற்றில் ஐரோப்பிய கண்டத்துக்கான பிளே-ஆப் சுற்றின் ஒரு இறுதி ஆட்டம் போஸ்னியாவில் உள்ள செனிகா நகரில் நடந்தது. இத்தாலி பெனால்டி ஷூட்-அவுட்டில் 1-4 என்ற கோல் கணக்கில் போஸ்னியா அணியிடம் மண்ணை கவ்வியது. இதனால் இத்தாலி அணி தொடர்ந்து 3-வது முறை யாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பறிகொடுத் தது. இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த சோகத்துக்குள்ளானார்கள்.

இந்த நிலையில், இத்தாலி அணி தோல்வி அடைந்ததால் இத்தாலி கால்பந்து சம்மே ளன தலைவர் கேப்ரியல் கிரவினா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com