

ரோம்,
களிமண் தரை போட்டியான 83-வது இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் இன்று தொடங்கி 17-ந்தேதி வரை நடக்கிறது. இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் போட்டியாகும். ஆண்கள் ஒற்றை யரில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), ஒலிம்பிக் சாம்பிய னான நோவக் ஜோகோவிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர் மனி), அலியாசிம் (கனடா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), மெட்விடேவ் (ரஷியா). அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர் கள் களம் காணுகிறார்கள்.
பெண்கள் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), எலினா ரைபகினா (கஜகஸ் தான்), கோகோ காப், ஜெசிகா பெகுலா, அனிசிமோவா (அமெரிக்கா), ஸ்வியாடெக் (போலந்து) போன்ற நட் சத்திர வீராங்கனைகள் வரிந்து கட்டுகிறார்கள்.