இத்தாலி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com