

புதுடெல்லி,
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனைகளாக வளம் வருபவர்கள் மணிகா பத்ரா மற்றும் அர்ச்சனா காமத். கடந்த வாரம் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர சாம்பியன் கோப்பைகான போட்டியில் இவர்கள் அரையிறுதி வரை சென்று போராடி தோல்வி அடைந்து வெண்கல பதக்கத்தை தட்டி சென்றனர்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் இரட்டையர் பிரிவுகளுக்கான சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு இரட்டையர் பிரிவுகளுக்கான டேபிள் டென்னிஸ் தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் வாங் மான்யு - யிங்ஷா இணை 4289 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் ஜப்பான் இணை ஹினா - மீமா இட்டோ உள்ளனர்.
இந்த பட்டியலில் மணிகா பத்ரா- அர்ச்சனா காமத் ஜோடி 1501 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.